
இலங்கை சிறையிலிருந்து 8 மீனவர்கள் விடுதலை: சென்னை வருகை
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 மீனவர்களில், படகு ஓட்டுநருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மற்ற 8 மீனவர்களை விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட 8 மீனவர்களும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அவசரகால பயண ஆவணங்களுடன் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.



































