
அமெரிக்காவில் உழவர் சந்தைக்குள் புகுந்த கரடி (வைரல் வீடியோ)
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள உழவர் சந்தைக்குள் நுழைந்த பெரிய கருப்புக் கரடி ஒன்று, பேக்கரி ஸ்டாலில் இருந்த சுடச்சுட ரொட்டிகளை நிதானமாக ருசித்துச் சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காடுகளில் நிலவும் வறட்சி மற்றும் குளிர்கால உறக்கத்திற்கு முன் கொழுப்பைச் சேமிப்பதற்காகக் குடியிருப்புப் பகுதிக்குள் இக்கரடி நுழைந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. தகவலறிந்து வந்த அதிகாரிகள், யாருக்கும் காயம் ஏற்படாத வகையில் கரடியைப் பத்திரமாக விரட்டி அப்புறப்படுத்தினர். நன்றி:DailyMail



























