
பிரிட்டன் சாலைகளில் இந்திய ஆட்டோ: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ
இந்திய மக்களின் போக்குவரத்தில் பிரிக்க முடியாத அங்கமாக திகழும் ஆட்டோ ரிக்சா, பிரிட்டன் நகரின் பரபரப்பான சாலைகளில் ஓடும் விடியோவை பிரபல இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது 'X' பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சொகுசு கார்கள் மட்டுமே அதிகம் உலா வரும் பிரிட்டன் வீதிகளில் இந்திய பாணி 3 சக்கர ஆட்டோ ஓடுவதை பார்த்த இணையவாசிகள் பலரும் ஆச்சரியமும் பெருமையும் அடைந்து வருகின்றனர். மஹிந்திரா பகிர்ந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
















