2008-ல் தொடங்கப்பட்ட
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தொடருக்கான வீரர்கள் ஏலம் கோவாவில் உள்ள பிரபல 'ஐடிசி கிராண்ட் கோவா' நட்சத்திர ஓட்டலில் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இந்த ஏலத்திற்கான அதிகாரப்பூர்வ தேதியை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களிடையே இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.