திருப்பூரில் 1,800 ஆண்டுகள் பழமையான 2 மண்பாண்டங்கள் கண்டெடுப்பு

1410చూసినవారు
திருப்பூரில் 1,800 ஆண்டுகள் பழமையான 2 மண்பாண்டங்கள் கண்டெடுப்பு
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, சுமார் 1,800 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் 2 கலைநயமிக்க மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தகவலறிந்து விரைந்து வந்த தொல்லியல் துறை அலுவலர்கள் அப்பகுதியை ஆய்வு செய்ததுடன், இப்பகுதியில் பண்டைய கால வரலாறு மற்றும் தொல்லியல் தடயங்களை வெளிக்கொணர பல இடங்களில் தோண்டி ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த மண்பாண்டங்கள் வரலாற்று ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

సంబంధిత పోస్ట్