கொரோனா காலத்திற்கு பிறகு உலகளவில் மனநலம் தொடர்பான பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளதாகவும், தற்போது சுமார் 120 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்து மருத்துவர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த தரவுகளின்படி உலகெங்கிலும் உள்ள மனிதர்களில் 7-ல் ஒருவர் கடுமையான மனசோர்வு மற்றும் மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதிலிருந்து மீண்டு வர உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு மற்றும் சீரான உறக்கம் ஆகியவற்றில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.