இந்தியாவில் 26 கோடி பேர் புகையிலை பயன்படுத்துவதாகவும், 14 முதல் 16 சதவிகிதம் பேர் மது அருந்துவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மது மற்றும் புகை பழக்கங்கள் புற்றுநோய், இதய நோய், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட கடுமையான உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 13 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.