தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 1,68,825 பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரைவு பட்டியலில் இருந்து 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்ட நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் டிச.28-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய (டிச.25) நிலவரப்படி ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் அளித்துள்ள சூழலில், தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.