ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள லேகா மண்டி சாலையில் நடந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிப்பர் லாரி ஒன்று தொடர்ச்சியாக 17 வாகனங்கள் மீது மோதியதால் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இது ராஜஸ்தானில் 24 மணி நேரத்திற்குள் நடந்த இரண்டாவது பெரிய விபத்து ஆகும்.