மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் பிவண்டியில் கோஹினூர் என்ற 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 10 பேர் ஆக உயர்ந்துள்ளது. மோசமான நிலையில் இருந்த கட்டிடத்தை காலி செய்ய மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியும், குடியிருப்பாளர்கள் வெளியேறவில்லை. மாநகராட்சியின் அனுமதி இன்றி பழுதுபார்க்கும் பணி நடந்த நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.