தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள
விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று கூறினோம், ஆனால் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும், தவெக தரப்பில் தங்களுக்கு 10 அமைச்சர் பதவிகள் தருவதாகக் கூறியதாகவும், நாமும் அமைச்சராக இருந்தால் நன்றாக இருக்கும் என இபிஎஸ்ஸிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவில் அதிரடி நீக்கங்கள் நடக்கும் சூழலில் இவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.