ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது

2பார்த்தது
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களையும், அவர்களது ஒரு படகையும் சிறைபிடித்த கடற்படையினர், அவர்களை மன்னார் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் மீனவர்கள் குடும்பத்தினர், மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி