தவெக தலைவர் விஜய், பாட்டு பாடும்போதே அவர் மீது செருப்பு வீசப்பட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (அக்.15) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாட்டிலுக்கு 10 ரூபாய் என்ற பாடலை விஜய் பாடும்போதே அவர் மீது செருப்பு வீசப்பட்டது, மின்சாரம் நிறுத்தப்பட்டது, லத்தி சார்ஜ் நடத்தப்பட்டது. ஆனால், ‘அது எதுவுமே நடக்கவில்லை’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.