இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த டிரம்ப், அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10% வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 50% வரி அண்மையில் 18% ஆக குறைக்கப்பட்டது. இந்தியாவுக்கு மட்டும் 18% வரி மாற்றமின்றி அப்படியே தொடரும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.