கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் திடீர் திருப்பமாக, சம்பவம் தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றவாளியை விரைந்து பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.