மத்திய அரசு அறிவித்துள்ள புதிய VB-G RAM G திட்டம் வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு (100 நாள் வேலைத் திட்டம்) மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.