மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டு வரும் நிதியைப் பெருமளவு குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தின் பங்கு 2014-ல் 10% ஆக இருந்த நிலையில், தற்போது 4.1% ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கேரளாவுக்கு 2.38% ஆகவும், தெலங்கானாவுக்கு 2.17% ஆகவும் நிதிப் பங்கு குறைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.