வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (மே 28) முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு 100 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாக திருவிழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தர உள்ளதால், பொதுமக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.