பரந்தூரில் 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது

6பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்காக, தற்போது 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்பணி நிறைவடைந்துள்ளதாக வருவாய்த் துறை தகவல் தெரிவித்துள்ளது. நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.29,150 கோடி திட்ட மதிப்பில் இந்த விமான நிலையம் அமையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நன்றி:NewsTamil24/7