தமிழகத்தில் விவசாயிகளுக்கு உரம், விதைகளை வழங்க 1,000 வேளாண் மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (பிப்., 17) வேளாண் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், நெல் ஜெயராமனின் நெல் பாதுகாப்பு இயக்கம் மூலம் 70,000 விவசாயிகளுக்கு நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.