ரூ.42 கோடியில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், வேளாண் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களின் படிப்பறிவும், தொழில்நுட்பத்திறனும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் 1,000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.42 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.