சென்னைக்கு 1,000 புதிய ஏசி மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், பேருந்து பணிமனைகளில் மின்சார உட்கட்டமைப்பு மேம்பாடுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். போக்குவரத்துத்துறைக்கு மொத்தம் ரூ.13,561 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.7,675 கோடி மானியம் வழங்கப்படும் என அறிவித்தார்.