பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பருத்தி இறக்குமதியின் மீதான அனைத்து முறை சுங்க வரிகளில் இருந்தும் தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறையினர் கோரிக்கையை ஏற்று அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற ஆசிய நாடுகள் எந்தவிதமான வரியும் இல்லாமல் பருத்தியிலிருந்து கிடைக்கும் பஞ்சை இறக்குமதி செய்கின்றன. இந்தியாவில் 11 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதால் ஜவுளித்துறை பாதிப்படைந்து வந்தது. தற்போது அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.