சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் பறக்கும் ரயில் நிலையத்தில் திடீரென லிஃப்டில் பழுது ஏற்பட்டது. அப்போது லிஃப்டில் 11 பெண் பயணிகள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் நந்தகுமார் தலைமையிலான தீயணைப்புத்துறையினர், லிஃப்டை உடைத்து 11 பெண் பயணிகளையும் மீட்டனர். இந்த சம்பவம் காரணமாக ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.