மத்தியப் பிரதேசத்தின் சீகோர் மாவட்டத்தில் உள்ள பாதாளேஸ்வரர் கோவில் யாகத்தின் நிறைவாக, நர்மதா நதியைத் தூய்மைப்படுத்த அதிகளவில் பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பெருமளவு பால் வீணடிக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பாலில் உள்ள கொழுப்பு நதிநீரின் ஆக்சிஜன் அளவைக் குறைத்து மீன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.