ஆட்டை விழுங்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

4554பார்த்தது
ஆட்டை விழுங்க முயன்ற 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மதினா நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஓடை அருகே, வீட்டில் வளர்க்கப்படும் ஆடு ஒன்றை 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று விழுங்க முயன்றது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த மலைப்பாம்பை உயிருடன் மீட்டனர்.
Job Suitcase

Jobs near you