திருமணத்திற்கு செல்லும் வழியில் கோர விபத்து - 12 பேர் பலி

12849பார்த்தது
திருமணத்திற்கு செல்லும் வழியில் கோர விபத்து - 12 பேர் பலி
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில், திருமண விழாவிற்கு சுமார் 100 பேருடன் சென்ற லாரி, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்; 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. லாரியில் அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்றதே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி