சேலத்தில் பாமகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ராமதாஸ், ஜி.கே.மணி, ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி உள்ளிட்ட 12 பேருக்கு மேடையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. பாமக கூட்டணி தொடர்பான முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அன்புமணி தரப்பின் எதிர்ப்பையும் மீறி இந்த கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.