செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம்

10696பார்த்தது
செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது ஆதரவாளர்கள் 12 பேரை நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்.பி., சத்யபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட 12 பேரை நீக்கி இபிஎஸ் இன்று (நவ., 07) உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்த நிலையில் தற்போது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
Job Suitcase

Jobs near you