நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில், 12 வயது சிறுவன் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சலூனுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிஷாப் என்ற அந்தச் சிறுவனை யானை திடீரென தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அங்குச் சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.