புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான 30 தொகுதிகளிலும் முதியோர் மற்றும் அதிகாரிகள் என 12,591 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. 294 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், நாளை (ஏப்.9) காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவில் 90%-க்கும் மேல் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.