தென்ஆப்பிரிக்காவின் கவுடேங் மாகாணத்தில் பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற மினி பேருந்து, முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 மாணவிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 7 மாணவிகள் சிகிச்சையில் உள்ளனர். விபத்தில் காயமடைந்த டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தென்ஆப்பிரிக்கா அதிபர் இரங்கல் தெரிவித்துள்ளார்.