13 வயது சிறுமி கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை, அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (26), மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவியை, அவரது தாய் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மாணவி கர்பமாக இருப்பது தெரியவந்தது. கதிகலங்கிப்போன பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போக்சோ வழக்கில் கார்த்திக்கை கைது செய்தனர்.