மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 13 வயது சிறுமியை 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் தொடர்பாக மணமகன் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை இறந்த பிறகு அவரது தாய் மறுமணம் செய்துகொண்டார். இதனால் சிறுமி தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சிறுமியை, 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க தாத்தா முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.