பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பைசலாபாத் பகுதியில் உள்ள பசை தயாரிக்கும் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததால் குறைந்தது 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர். வெடிப்பால் தொழிற்சாலை கட்டிடம் கடுமையாக சேதமடைந்ததுடன், அருகிலுள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டன. சம்பவத்துக்குப் பின்னர் தப்பிய தொழிற்சாலை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிற்சாலை உரிமையாளரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.