திருப்பூரில் லாரி டிரைவராக
வேலை செய்து வந்த 50 வயது நபர், 2வது திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது மகள் என்றும் பாராமல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அவரை 7 மாத கர்ப்பமாக்கியுள்ளார். சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது கர்ப்பம் உறுதியானது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் லாரி டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.