வேலூர் மாவட்டம் அருகே 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், மாணவி காதலித்த
சஞ்சய் (19) குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.