தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு கூடுதலாக 150 இளங்கலை மருத்துவ இடங்கள் (MBBS) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 கூடுதல் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஒதுக்கீட்டின் மூலம் நடப்பு கல்வியாண்டில் தமிழக மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை வாய்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.