ஈரான் நாட்டின் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, சுமார் 15,400 டன் எல்பிஜி எரிவாயுவுடன் 'கிரீன் ஆஷா' கப்பல் நவி மும்பை துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளது. போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானின் ஒத்துழைப்புடன் எரிசக்தி இறக்குமதியை இந்தியா வெற்றிகரமாக தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கில் போர் தொடங்கியது முதல் இதுவரை மொத்தம் 8 எல்பிஜி கப்பல்கள் எவ்வித இடையூறுமின்றி இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளது நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய பெரிதும் உதவுகிறது.