தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,000 சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஜன.6-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பொதுமக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதால், வழக்கத்தை விட சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், பேருந்து முன்பதிவு மற்றும் கூடுதல் வழித்தடங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.