பாகிஸ்தானின் மார்தான் மாவட்ட ஸ்வாட் விரைவுச்சாலையில், பழுதாகி சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது மற்றொரு பயணிப் பேருந்து மோதிய கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.