சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 2021ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி தொடங்கி நேற்றுமுன்தினம் வரை மொத்தம் 161 நாட்கள் நடைபெற்றதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அமலு, அரவிந்த் ரமேஷ், வி.ஜி.ராஜேந்திரன், பிரின்ஸ், முகமது ஷாநவாஸ் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் 5 ஆண்டுகளாக தவறாமல் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர். பார்வையாளர் மாடத்தில் 70,959 பேர் அனுமதிக்கப்பட்டனர் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.