உத்தரகாண்டில் கடந்த 48 மணி நேரத்தில் சார் தாம் மற்றும் ஆதி கைலாஷ் யாத்திரை பாதைகளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். துங்கநாத் பகுதியில் வீசிய கடுமையான புயல் காற்றில் சிக்கி உ.பி-யைச் சேர்ந்த இரு சகோதரர்களும், யாத்திரையின் போது உடல்நலக்குறைவு மற்றும் மாரடைப்பால் இரு முதியவர்களும் இறந்தனர். மேலும் சாமோலி ஆம்புலன்ஸ் விபத்து, கங்கோத்ரி கார் விபத்து உள்ளிட்ட பல்வேறு விபத்துகளில் 14 பேர் பலியாகியுள்ளனர்.