செஞ்சி - விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். பின்னர், சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கியதாக தெரிகிறது. அதனை சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர்களை மீட்ட ஆசிரியர்கள், செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.