இந்தியாவின் புகழ்பெற்ற போர் வீரரும், 'வீர் சக்ரா' விருது பெற்றவருமான கே.ஜி. ஜார்ஜ் (95), வயது மூப்பு காரணமாக இன்று (மார்ச்.8) காலமானார். கடந்த 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் மிகச்சிறப்பாக பணியாற்றிய இவருக்கு, நாட்டின் உயர்ந்த போர்க்கால வீர விருதுகளில் ஒன்றான வீர் சக்ரா வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், "ஜார்ஜ் அவர்களின் இழப்பு இந்திய ராணுவத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று" என ராணுவம் தனது புகழாரத்தை சூட்டியுள்ளது.