கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தவக்காரா பகுதியில் இன்று காலை தனியார் கல்வி நிறுவனத்தில் பி.எஸ்சி. படித்து வரும் இரு மாணவிகள் சாலையை கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்து, கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.