மதுரை சிலைமான் பகுதியில் நடைபெற்ற கல்யாண மண்டபக் கட்டுமானப் பணியின்போது, எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததில் தனலட்சுமி, லெட்சுமி ஆகிய இரு பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.