திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று (மே.29) அமைச்சர் என தெரியாமல் ரமேஷிடம் லஞ்சம் வாங்கிய கோயில் நிர்வாகிகள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த ஆய்வின்படி, கையூட்டாக பணம் பெற்று முடியிறக்கம் செய்த புகாரில் முடி இறக்கும் பணியாளர்கள் சங்கர், நாகராஜ் ஆகியோரின் தொழில் உரிமம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.