ரஷ்யாவின் பெர்ம் பகுதியில் உள்ள அஷாத்லி பூங்காவில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தொழிலதிபர் இலியாஸ் கிமதுடினோவ் (41) மற்றும் எல்மிர் கொன்யாகோவ் ஆகியோர் உயிரிழந்தனர். ராபின்சன் R44 ரக ஹெலிகாப்டர் ஸ்கை லிஃப்ட் கேபிள்களில் மோதி விபத்துக்குள்ளானது. முறையான அனுமதி இன்றி ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.