விருதுநகர்: ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகள் 2 பேரை கொலை செய்துவிட்டு, உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்து அருளிய சுவாமி கோயில் காவலாளிகள் பேச்சுமுத்து, சக்கரபாணி ஆகியோரை நேற்றிரவு மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு கொள்ளையடித்துள்ளனர். காலை 7 மணிக்கு கோயிலை திறந்தபோது இருவரும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.